வறுமையை ஒழிக்கும் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு இன்று ஆரம்பம்

வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று 2ஆம் திகதி  முதல் ஆரம்பமாகின்றது.

அரசால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
 

ஆறு மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப திறன் சாரா சம்பளம் (PL-I) (35,000/=) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.

10 வருட கால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும்.
 
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!