கட்டாரில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ்
கட்டாரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
கட்டாரில் இருந்து வந்த 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.
கட்டாரில் இருந்த வந்த 54 பேர் நேற்று மாலை முதல் இன்று காலை 10 மணி வரை வரையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 398 பேருடன் கட்டாரில் இருந்து இலங்கைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் பயனம் செய்த 54 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.