இலங்கையிலிருந்து தப்பிச்சென்றவர்களை கைதுசெய்ய சிவப்பு அறிவித்தல்

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வரும் 14 பேரை கைதுசெய்வதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சர்வதேசப் பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொண்டுள்ளளனர்.

கொலை , கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, பிரபல பாதாளக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யவே இவ்வாறாக சிவப்பு அறிவித்தல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களைச் சர்வதேசப் பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்ய இலங்கைப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!