அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை பொறுப்பேற்றார்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை இன்று திங்கட்கிழமை [1/9] உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!