இந்தியாவின்முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு

இந்தியாவின்முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்புக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 84.  கடந்த 9 – ஆம் திகதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்து அகற்றப்பட்டது.  ஆனால் அதன்பின் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

எனவே வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.  ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருந்த பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வந்தது.

இவற்றுக்கிடையே கொரோனா பாதிப்புக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.  இதனை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி உள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதன்படி, ஆகஸ்டு 31  – ஆம்திகதி (இன்று) முதல் செப்டம்பர் 6 – ஆம்திகதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!