இரண்டு ஆளுநர்கள் இடமாற்றம்

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் கடந்த நவம்பர் மாதம் ஊவா, வடமேல் மாகாண ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.<

இதனடிப்படையில் வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம்.முஸ்ஸாமில் ஊவா மாகாண ஆளுநராகவும், ஊவா மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மீண்டும் ஆளுநர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மொஹான கருணாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!