கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக ஜீ.வீரசிங்க தெரிவு
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய செயலாளராக அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் மருத்துவர் ஜீ.வீரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் அவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.<
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான பதவியாக அந்த கட்சியின் செயலாளர் பதவி கருதப்படுகிறது. கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த டியூ. குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்த புதிய செயலாளர் பதவிக்கு மருத்துவர் வீரசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.