ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர்- ட்ரம்ப்

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட  கமலாஹரிசை விட   இவாங்கா தகுதியானவர் என்று மகள் குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ஆம் திகதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களம் இறங்கி உள்ளார்.

அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் போட்டியிடுகிறார். இவரது தாய் சியாமளா சென்னையில் பிறந்தவர். தந்தை டெனால்டு ஹரீஸ் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.

அமெரிக்க தேர்தலில் தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ட்ரம்ப் மீது ஜோபிடன், கமலா ஹரிஸ் ஆகிய இருவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதே போல் ட்ரம்பும் அவர்கள்  மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இதற்கிடையே 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் கமலா ஹரிஸ் திறமையில்லாதவர். அவரை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தனது மகள் இவாங்கா தகுதியானவர் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

நியூஹாம்ஸ்பியரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க ட்ரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

”நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக  ஒரு பெண் வருவதை நான் விரும்புகிறேன். ஆனால் அது கமலா ஹரிஸ் அல்ல. அவருக்கு அதற்கான தகுதி கிடையாது.

அவரது கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் அவரும் களம் குதிக்கிறார். ஆனால் அவரது செல்வாக்கு குறைந்து இருந்தது.

 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிசை விட என் மகள் இவாங்கா டிரம்ப் போட்டியிட தகுதியானவர். இவாங்கா அதிபராக வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். அவர்களை குறை சொல்ல மாட்டேன். இவாங்கா சிறந்த வேட்பாளராக இருப்பார்” – என்றார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!