நேரடியாக ஓடிடி-யில் ‘மூக்குத்தி அம்மன்’?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

 திரை அரங்குகள்மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் சூரரைப் போற்று வருகிற அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.  நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் வெளியாகஉள்ளதாக கூறப்படுகிறது. படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடி வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!