கின்னஸில் இடம் பிடித்த உலகின் மிக வயதான தம்பதி

  தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் வசித்து வரும், ஜூலியோ சீசர் மோரா, 110, வால்ட்ராமினா குயிண்டேரோ, 104, தம்பதியினர், உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த தம்பதியினர், 1941ல், காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

ஜூலியோ காதல் திருமணத்திற்கு பெற்றோர், உறவினர்கள் சம்மதம் கிடைக்க வில்லை. இருப்பினும் அவர்கள் அனைவரையும் உதறி தள்ளிவிட்டு குயிண்டரோவை கரம்பிடித்தார். 79 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த காதல் தம்பதிக்கு 4 மகன்/மகள்களும், 11 பேரன்களும், 25 கொள்ளு பேரன்களும், 1 பேரன் வயிற்று பேரனும் உள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவை கூட விவாகரத்து பற்றி சிந்தித்ததில்லை என்று கூறுகின்றனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களான இவர்கள் ஈக்குவடார் நாட்டின் தலைநகர் குய்டோவின் வடக்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அன்பு, பரஸ்பர மரியாதை, நேர்மையான வேலை, சரியான கல்வி உள்ளிட்டவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என, அந்த தம்பதியினர் புன்னகையுடன் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!