தொண்டமானாறு பாலத்தினுடான போக்குவரத்திற்கு அனுமதி

தொண்டமானாறு செல்வச்சந்நிக்குச் செல்லும் பக்தர்களின் வசதி கருதி  கிழக்கு பக்கத்தில் உள்ள பாலம் ஊடான போக்கு வரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தினுடான போக்குவரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை வருடா வருடம் வலி. கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.

இம்முறை கொரோனா முன்னெச்சரிக்கை வழிவகைகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவிற்கு இணங்க மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களின் எண்ணிக்கை நேர வரையரைகள் சுகாதார விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!