இடைக்காலக் கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசின் எதிர்வரும் நான்கு மாதங்களுக்காக முன்வைக்கப்பட்டிருந்த இடைக்காலக் கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
எதிர்வரும் நான்கு மாதங்களின் செலவுக்காக 1,745 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ள பராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காகப் பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச நேற்று பாராளுமன்றத்துக்கு கணக்கறிக்கைப் பிரேரணையைச் சமர்ப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் குறித்த கணக்கறிக்கை மீதான விவாதம் இரண்டு நாட்கள் இடம்பெற்றது. விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கணக்கறிக்கை தொர்பாக பல்வேறு விமர்சன ரீதியிலான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இறுதியில் நேற்று மாலை கணக்கறிக்கையை ஏற்றுக்கொள்வதா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேட்டபோது, ஆளும் கட்சியினர் “ஆம்” எனத் தெரிவித்து அங்கீகரித்தனர்.
கணக்கறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தபோதும் கணக்கறிக்கைக்கு வாக்கெடுப்பை யாரும் கோராததால் வாக்கெடுப்பின்றி இடைக்காலக் கணக்கறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.