நாடு பூட்டப்பட்டது எனக் கூறிஅரசமைப்பை மீற முடியாது – அநுரகுமார

“கொரோனா காலத்தில் பணம் செலவிடப்பட்ட விதம் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். நாடு பூட்டப்பட்டது என்று கூறி அரசமைப்பை எவரும் மீற முடியாது.”

– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.

இவ்வருடத்தின் அடுத்த நான்கு மாதங்களுக்குரிய இடைக்காலக் கணக்கறிக்கை மீதான நேற்றைய விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இவ்வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை பணம் செலவிடப்பட்ட விதம் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பிட்ட அக் காலத்தில் பணம் செலவழிக்கப்பட்ட விதம் அரசமைப்புக்கு விரோதமானது. இலங்கை வரலாற்றிலே வரவு – செலவுத் திட்டம் இல்லாத முதல் ஆண்டு இந்த ஆண்டுதான்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!