காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன்காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்தார். கடந்த 10-ஆம் திகதி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!