துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சி சார்பில், தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், 61, அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டி யிடுகிறார். அக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் குடியரசு கட்சியின் மாநாடு, மேரிலேண்டில் நடந்து வருகிறது.மூன்றாவது நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வேட்பாளராக, தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள மைக் பென்ஸ் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!