சபாநாயகர் யாப்பாவுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மரியாதையின் நிமிர்த்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை பாராளுமன்ற வளாகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இந்தியத் தூதுவருக்குச் சபாநாயகர் மதியபோசன விருந்தளித்தார். மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற சபாநாயகராகப் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது வெளிநாட்டுத் தூதுவருடான சந்திப்பாக இது அமைந்துள்ளது.