உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: அமைச்சர்கள் உட்பட 8 பேர் விசாரணைக்கு அழைப்பு

 
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னாள் ,இந்நாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பேரை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை நாளை 28 ஆம் திகதியும், முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை எதிர்வரும் 31ஆம் திகதியும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது தவிர முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும  பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ஆகியோரை செப்டெம்பர் 02 ஆம் திகதியும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திகாந்தன் ஆகியோரை செப்டெம்பர் 03 ஆம் திகதியும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை செப்டெம்பர் 07 ஆம் திகதியும், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை செப்டெம்பர் 08 அம் திகதி ஆஜராகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!