13 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/08/arrree-1.jpg)
விஸா காலாவதியான பின்னர் கல்கிஸைப் பகுதியில் தங்கியிருந்த சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சேர்ந்த 20 முதல் 44 வயதுடைய 13 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பூகொடை விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தமைக்கு அமைய, கல்கிஸைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேரம் வீதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தவர்களே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, விஸா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் ஒன்பது பெண்களும், நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெண்ணொருவர் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 10 ஆயிரத்து 300 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கல்கிஸைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.