சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3- ஆம்திகதி  ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயகக் கட்சியிம்,குடியரசுக் கட்சியும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்றது. தற்போது குடியரசுக் கட்சிசார்பாக அமெரிக்க முதல் குடிமகள் மெலனியா ட்ரம்ப் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய பிரசார உரையில் ட்ரம்ப் ஜோ பிடேனை கடுமையாகத் தாக்கிப்பேசினார். தற்போது மெலனியா ட்ரம்ப், சார்லட் நகரில் உரையாற்றினார். ஜோ பிடேனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவை சீனாவுக்கு அவர் தாரைவார்த்து விடுவார் என நேற்று ட்ரம்ப் கடுமையாக சாடியிருந்தார். குடியரசுக் கட்சி, ஒவ்வொருநாள் பிரச்சாரத்துக்கும் ஒவ்வொரு பெயர் வைத்துள்ளது.

திங்கட்கிழமை பிரசாரத்துக்கு ‘லேண்ட் ஆப் ப்ராமிஸ்’ எனவும் செவ்வாய்க்கிழமை பிரசாரத்திற்கு ‘லேண்ட் ஆப் ஆப்பர்சூனிட்டி’ என்றும் பெயர் சூட்டி இருந்தது. நான்கு நாட்கள் பிரசாரத்தின் இறுதியில் ட்ரம்ப் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது. இரண்டாம் நாள் நடந்த கூட்டத்தில் ட்ரம்பின் பிள்ளைகளான டிஃபேனி, எரிக் ஆகியோரும் கலந்துகொண்டனர். மெலனியாவின் உரை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய பக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!