பலூன் பொம்மையை பிடித்த படி கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி மீட்பு

கிரீஸ் நாட்டின் ஆன்ட்ரியோ கடற்கரை நகரில் தன் பெற்றோருடன் கடற்கரையோரம் பலூன் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை ராட்சத அலை ஒன்று கடலுக்குள் அடித்துச் சென்று விட்டது.

  குழந்தையின் பெற்றோர் நம்பிக்கை தளராமல் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கடற்கரையிலிருந்து சுமார் 1 கி.மீ., தொலைவில் நடுக்கடலில் பலூன் பொம்மையை கெட்டியாக பிடித்துக் கொண்டு சிறுமி கடலில் தத்தளித்ததை கண்டனர்.

இதைக் கண்ட அவர்கள் விரைவாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் சிறுமி அவளது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். சிறுமி லைப் ஜாக்கெட் கூட அணிய வில்லை என்றும், போன் வரும் நேரத்தில் கடலுக்குள் காவல் படையினர் இருந்ததால் எளிதாக சிறுமியை மீட்க முடிந்தது என்று தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!