இடைக்காலக் கணக்கறிக்கை நாளை சபையில் முன்வைப்பு

இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கான அரசின் வரவு – செலவுகள் தொடர்பான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. 

 நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும்போது  இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அமைச்சரவைக் கூட்டம், வாரம் தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையின் கீழ் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!