பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவுடன் ஒப்பந்தம்
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்யவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முன்னர் அதனை அமைச்சரவையில் முன்வைத்து அமைச்சரவையின் அனுமதியை பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரு வாரங்களுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.