பாராளுமன்ற மக்கள் கலரி மறு அறிவித்தல் வரை பூட்டு

மீள அறிவிக்கும் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரி திறக்கப்படுவது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று  காரணமாக, சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெனாண்டோ தெரிவித்தார்.
 
பாராளுமன்ற பொதுமக்கள் கலரியை மீண்டும் திறப்பது தொடர்பான திகதி சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!