மைத்திரியின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி விசாரணைக் குழு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு இன்று காலை சென்றுள்ளனர்.
மைத்திரிபாலவிடம் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே அந்தப் பிரிவினர் அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க வருமாறு முன்னாள் ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடந்த வாரம் விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அவர் நிராகரித்திருந்தார்.
தன்னால் விசாரணைக் குழுவுக்கு வர முடியாது எனவும், தனது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் விசாரணை குழுவுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.