சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்
இலங்கையின் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர்களில் ஒருவரும், சூரியன் தனியார் வானொலியின் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளரும் முன்னாள் ஆலோசகருமான திரு.சி.நடராஜசிவம் அவர்கள் நேற்று காலமானார்.
இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத் துறையில் வலிமைமிக்க ஆளுமையாளர்களில் நடராஜசிவமும் குறிப்பிடத்தக்கவர்.
நீண்டகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய அவர், பின்னர் சூரியன் தனியார் வானொலியிலும் பணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். பல நாடகங்களிலும் அவர் நடித்திருக்கின்றார்.