ஐ.தே.கவின் தலைவர், தேசியப் பட்டியல் விவகாரத்தில் முடிவு காணப்படவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தலைமை மாற்றம்   தேசியப் பட்டியல் நியமன விவகாரம் ஆகியவற்றுக்கு முடிவு காணப்படவில்லை. .

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் சிறிகொத்தாவில் நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் கட்சியின் அவை தொடர்பாக எவ்வித  இறுதித் தீர்மானமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எதிர்வரும் செப்டெம்பர்  05ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக்  கூட்டத்தில் கட்சியின் தலைமை, தேசியப் பட்டியல் உறுப்பினர் குறித்து இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!