மாகாண சபைத் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையாளர் ஓய்வுபெற வேண்டும் – விமல் வீரவன்ச
“மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஓய்வுபெற வேண்டும்.”
– இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முரணான அணுகுமுறையைத் தேர்தல்கள் ஆணையாளர் பின்பற்றுகின்றார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அலட்சியமாக – அக்கறையற்றுக் காணப்பட்டார் என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.
ஆனால், தற்போது மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுவதைத் துரிதப்படுத்த அவர் முயல்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளர் ஓய்வுபெறுவது புத்திசாலித்தனமான செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.