பிறந்த நாள் கொண்டாடிய உசேன் போல்டிற்கு ‘கொரோனா’
ஜமேக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ் தடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 21-ஆம் திகதி தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அவருடன் இங்கிலாந்துஉதைபந்தாட்ட வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், நெருங்கிய நண்பர்கள் பல்வேறு விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்றனர். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை யடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.