இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகள்!
கொரோனா வைரஸ் நோயாளர்களை அடையாளம் காணும் வகையில், இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, நாளொன்றுக்கு 500 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படக்கூடிய ஆய்வுகூடமொன்று கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் (முல்லேரியா வைத்தியசாலை) நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மொத்தப் பெறுமதி 25 கோடி ரூபா ஆகும்.
பரிசோதனை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில், தன்னியக்க மாதிரியை உருவாக்கும் தொகுதியுடன் கூடிய நவீன உபகரணங்களைக் கொண்டதாக குறித்த ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.