சிறைக்குள் கைத்தொலைபேசிகள் கண்டுபிடிப்பு
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைதிகளைத் தடுத்து வைக்கும் பிரிவுக்கு அருகில் குழியொன்றைத் தோண்டி அதில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.