விக்கிக்கு யதார்த்த அரசியல் குறித்து எதுவுமே தெரியாது – கெஹலிய
“ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை குறித்து நாங்கள் கடுமையாக அதிர்ச்சி அடைகின்றோம். அவர் முன்னாள் நீதியரசராக இருக்கலாம். ஆனால் , யதார்த்த அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.”
– இவ்வாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையில்,
“ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையைப் பார்த்தீர்களா? அது தீவிரப்போக்கு உரையாகும். விக்னேஸ்வரன் பேசும்போது நான் அதிருப்தியடைந்துவிட்டேன். வேறு நாளாக இருந்திருந்தால் நான் சபையில் எழுந்திருப்பேன்.
விக்னேஸ்வரனை மீண்டும் இந்த நாட்டில் ஒரு நோயாக மாற வேண்டாம் என்று நாங்கள் கூறுகின்றோம். அவரின் பேச்சு தொடர்பில் அதிருப்தியடைகின்றோம். அவர் முன்னாள் நீதியரசராக இருக்கலாம். ஆனால், யதார்த்த அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது” – என்றார்.