பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிப் பட்டறை
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நாள் பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் இந்த பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தினங்களிலும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பயிற்சிகள் பாராளுமன்றத்தின் ஒன்றாம் இலக்க அறையில் நடைபெறவுள்ளன.
இந்த இரண்டு நாள் நிகழ்வுகளிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரதான அதிதியாக பங்கேற்பார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபபேவர்த்தன ஆகியோரும் இதில் பங்கேற்பர்.