பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் மாகாண சபைத் தேர்தல் நடக்கும் – பிரதமர் உறுதி

“நல்லாட்சி அரசால் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த கையோடு நடத்தப்படும்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து குருணாகலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகளின் நடவடிக்கை கடந்த ஆட்சியின்போது முடக்கப்பட்டது. அந்தச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் எமது வெற்றிநடை தொடரும். அதன்பின்னர் கூடிய விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்” – என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது அமைச்சர்களின் உறவினர்களுக்கே அபிவிருத்திக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் இதன்போது விமர்சித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!