உக்காத பொருட்களுக்கு தடை
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/08/FotorCreated-463-1024x491.jpg)
இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உக்காத பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய சுற்றுசூழல் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
இலங்கை சந்தைகளில் விற்பனையாகும் பொருட்களின் பட்டியல் தயாரித்துள்ளதாக மத்திய சுற்று சூழல் அதிகார சபையின் திட கழிவு நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பிலான யோசனை ஒன்று எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.