‘வெல்லே சாரங்க’ உள்ளிட்ட நால்வர் கைது

 கொழும்புக்கு கஞ்சா கடத்தும் பிரதான சந்தேகநபரான, ‘வெல்லே சாரங்க’ எனும் சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் துபாய் செல்ல தயாரான நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேகநபர்களில் ஒருவர் திட்டமிட்ட குற்றங்களைப் புரியும் குழுவொன்றின் தலைவரான ‘அங்கொட லொக்கா’ என்பவரின் உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கதலுவ லியனகே புத்திக சஞ்சீவ எனும் குறித்த சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸார் தெரவிக்கின்றனர். அத்துடன் அவர் வசமிருந்த ரூ. 2.9 மில்லியனுக்கும் அதிகமான பணமும் மீட்கப்பட்டுள்ளது.

ஆப்தீன் மொஹமட் சுபைர் எனப்படும் மற்றைய சந்தேகநபர், ‘அங்கொட லொக்கா’ என்பவரின் உதவியாளர்  எனத்  தெரிய வந்துள்ளது.

இச் சந்தேகநபர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையடித்த சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.

வெல்லே சாரங்கவுடன் கைது செய்யப்பட்ட நான்காமவர், ரணசிங்க ஆராச்சிகே இஷாரா லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இலங்கைக்கு கேரள கஞ்சாவை கடத்தி வரும் பிரதான சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!