இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி முடிந்தது – இந்திய தூதரகம்
இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வீட்டுவசதி திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இதன்படி மன்னார் பிராந்தியத்தில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு உறுதி அளிக்கப்பட்டது. இதுதவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் வீடுகளும் என மொத்தம் இந்தியா 63 ஆயிரம் வீடுகளை கட்டுகிறது.
இந்த நிலையில், மன்னார் பிராந்தியத்தில் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் இந்தியாவின் வீட்டு வசதி திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.