தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும் – நாடாளுமன்றில் கஜேந்திரகுமார்

இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் உள்ளன. அதில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார்.

தமிழர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் வடக்குகிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் சமவுரிமை, சம அந்தஸ்து, அரசியலமைப்பு திருத்தங்களின்போது சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்படவேண்டும். இது கடந்த தேர்தலில் வடக்குகிழக்கில் ஏகமனதாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் வழங்கிய ஆணையை மீறமுடியாது. அத்துடன், போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எந்த ஒரு நாடும் இறையாண்மை என்ற கொள்கையின் பின்னால் ஒளிந்து கொள்ளவும் பொறுப்புக்கூறலை தவிர்க்கவும் முடியாது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!