வெளிநாட்டிலிருந்த 135 பேர் நாடு திரும்பினர்

கட்டாரிலும், தாய்லாந்திலும் சிக்கியிருந்த  135 இலங்கையர் நாடு திரும்பினர்.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் கட்டாரின் டோஹாவிலிருந்து 47 பேரை ஏற்றிய கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விமானம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து 88 பேரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் UL 403 எனும் விமானம் இன்று காலை  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!