முதல் காரைத் தேடும் சச்சின்

இந்திய கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் 100 சதங்கள், அதிக ரன்கள் என பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியின் மூலமும், தனிப்பட்ட முறையிலும் ஏராளமான கார்களை பெற்றுள்ளார். ஆனால், முதன்முதலாக வைத்திருந்த மாருதி 800 கார் மீது சச்சினுக்கு அதிக பிரியம். தற்போது அந்த கார் அவரிடம் இல்லையாம். இந்த காரைப் பற்றி தகவல் தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்தவும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் ,

‘‘என்னுடைய முதல் கார் மாருதி 800. துரதிருஷ்டவசமாக தற்போது அது என்னிடம் இல்லை. மீண்டும் அது என்னுடையதாக இருக்க நான் மிகவும் விரும்புகிறேன். ஆகவே, அந்த கார் குறித்த தகவல்கள் தெரிந்த நபர்கள் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் வீட்டின் அருகே மிகப்பெரிய திறந்தவெளி தியேட்டர் இருந்தது. மக்கள் காரை பார்க் செய்துவிட்டு, காரில் இருந்தே படத்தை பார்ப்பார்கள். நான் எனது சகோதரருடன் இணைந்து எங்களுடைய பல்கனியில் இருந்து அந்த கார்களை பார்ப்போம்’’ என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!