படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானபோது, புதிய பாராளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே படகில் வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இது தொடர்பில் கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே கூறுகையில்

“ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்தது. அத்துடன் கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!