பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம்

9 வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பலத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையின் பிரதானமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பம்.

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் பாராளுமன்றம பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!