ரிஷாத்துக்கு எதிரான விசாரணை நிறைவு
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது ஆதரவாளர்களைப் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்ல அரச நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர்.
விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 222 பஸ்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு ரிஷாத் பதியுதீன் அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.