நல்லூர் கந்தனை அழகூட்ட நுழைவாயில்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்துக்கு வரும் நான்கு பிரதான வீதிகளிலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்படவுள்ளன.
இதன் முதல் கட்டமாக கிழக்கு வாயில் பக்கமாக செம்மணி வீதியில் அலங்கார வளைவுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் திசையில கோயில் வீதி, கைலாச பிள்ளையார் கோவிலடியில் அலங்கார வளைவு ஒன்று அமையவுள்ளது.
இந்த அலங்கார வளைவுக்கான அடிக்கல் நடும் ஆகம வழிபாடுகள் இன்று 19ஆம் திகதி, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது