இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்க்க மாட்டேன் டோனியின் ரசிகர்

இந்திய அணி வீரர் டோனி இல்லாததால் இனிமேல் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க மாட்டேன் என டோனியின் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். திடீரென வெளியான இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் டோனியின் தீவிர ரசிகரான சிகாகோ சாச்சா என்றழைக்கப்படும் முகமது பஷீர் இனி இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த முகமது பஷீர், சிகாகோவில் வசித்து வருகிறார். உலகத்தில் எங்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் அங்கு முகமது பாஷா கண்டிப்பாக இருப்பார்.   டோனிக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவார். இவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவின் டோனிக்கு தான் ஆதரவு தெரிப்பார்.

இவர் தற்போது டோனியின் ஓய்வு குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர்,

“டோனி இல்லாததால் இனி இந்தியா – பாகிஸ்தான் போட்டியை உலகில் எங்கு நடைபெற்றாலும் காண செல்லப்போவதில்லை.

ஒவ்வொரு வீரரின் பயணமும் ஒரு நாள் முடிவுக்கு வரும். ஆனால் டோனியின் ஓய்வு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பெரிய அளவிலான போட்டியில் ஓய்வு அளித்திருக்க வேண்டும்” –  என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!