ஜனாதிபதி வேட்பாளராக ஜோபிடன்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்  வேட்பாளராக ஜோபிடனை, ஜனநாயகக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3- ஆம் திகதி  ஜனாதிபதித்  தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் ஜனாதிபதிப்  பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ஜோ பிடனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ஜோ பிடன் தனது டுவிட்டரில்,

 “அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!