நீதி அமைச்சராகக் கடமைகளைப் பொறுப்பேற்றார் அலி சப்ரி

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்று நீதி அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தொடம்பஹல சந்திரசிறி தேரர், கம்புருகமுவே வஜிர தேரர், முருத்தட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரர், பெங்கமுவே நாலக நாயக்க தேரர், மகா சங்கத்தினர்கள், கலாநிதி ஹஸன் மௌலானா, இந்து மத குருமார்கள் ஆகியோர் அவருக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்  மஸ்தான்,  உட்பட பல அரசியல் பிரதிநிதிகள், நீதி அமைச்சின் மேலதிக  செயலாளர் திருமதி பியூமந்தி பீரிஸ் உட்பட பல  வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!