சுறாவுடன் போராடி மனைவியை மீட்ட கணவன்
அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரையில் 35 வயதான சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி தம்பதியினர் கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தனர். அபோது கடற்கரையில் உலாவும்போது 2 முதல் 3 மீற்றர் அளவுள்ள சுறாவால் தாக்கப்பட்டார். உடனடியாக டாய்லின் கணவர் சுறா மீது குதித்து அதனை குத்தி மனைவி டாய்லை மீட்டார்.
டாய்லுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாய்லுக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகு போர்ட் மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைரியமாக சுறாவைத் தாக்கி மனைவியை மீட்ட கணவரை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.