’19’ – க்கு முழுமையாக முடிவுகட்ட வேண்டும் – சுரேன் ராகவன்

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேரடியாகக் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த 19ஆவது திருத்தமானது இலங்கை அரசாங்கத்தையும் ஆட்சியிலிருக்கும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது.

19ஆவது திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால், அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம்தான் இன்று நாட்டில் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!