நாங்கள் சர்வாதிகாரிகள் அல்ல எதிர்க்கட்சியினர் அறிவற்றவர்கள் -மஹிந்த
“நாங்கள் சர்வாதிகாரிகளாக நடந்துகொள்ளவில்லை. எங்களை சர்வாதிகாரிகள் என்று விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் உண்மையில் அறிவற்றவர்களே.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார செய்திப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே பிரதமர் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரிகளாக இருந்ததில்லை. தீய நோக்கத்துடனேயே எதிர்க்கட்சியினர் எங்களை சர்வாதிகாரிகள் என்று கூறுகின்றனர்.
அவர்கள் அறிவற்ற வகையில் அவ்வாறு தெரிவிக்கின்றனர். அவர்கள்தான் கடந்த ஆட்சிக் காலத்தில் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டுள்ளனர். பொய்யான குற்றச்சாட்டுகளில் எங்களை சிறைகளுக்குக் கொண்டு சென்றனர்.
போர் வீரர்களையும் சிறைக்குக் கொண்டு சென்றனர். தங்களின் நலனுக்கு ஏற்ற விதத்திலேயே அவர்களின் சட்டங்கள் இருந்தன” – என்றார்.