ஆதராவாளர்களுடன் மணிவண்ணன் ஆலோசனை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் வகித்த பொறுப்புக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
நேற்று அவரது வீட்டில் பெருமளவு இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பெருமளவானவர்கள் அவரை கட்சியை விட்டு விலகும்படி வலியுறுத்தினர்
ஜனாதிபதி தேர்தலில் என்ன முடிவெடுப்பது என்பதை ஆராய கூடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டத்தில், சஜித் தரப்பை ஆதரிக்கலாமென்றும், பல்கலைக்கழக மாணவர்களின் இணக்கப்பாட்டு முயற்சி முடிவதற்கு முன்னர் முன்னணி ஒரு நிலைப்பாட்டை அறிவிக்ககூடாதென்றும் மணிவண்ணன் தனது கருத்தை தெரிவித்திருந்தார். மத்தியகுழு கலந்துரையாடலில் தலைமையின் முடிவிற்கு மாறாக எப்படி அவர் கருத்து தெரிவிக்கலாம் என முன்னணி தலைவர்கள் கருத்த வெளியிட்டனர்.
இந்த நிலையில், மணிவண்ணனை பொறுப்புக்களிலிருந்து நீக்குவதாக கஜேந்திரகுமார் தகவல் அனுப்பியிருந்தார். இதையடுத்து மணிவண்ணன் வீட்டில் தொடர்ந்து ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள்.
அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நேற்றும் இன்றும் மணிவண்ணன் கலந்துரையாடி இறுதி முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். ஒரு தொகுதி ஆதரவாளர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடந்தது. இன்று இரவும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதன்பின்னர் மணிவண்ணன் தனது முடிவை அறிவிப்பார்.